மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து காரியாலயங்களின் செயற்பாடுகளும் இன்று முதல் மீள ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி, முன்பதிவு செய்துக்கொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்பவர்களுக்கு மாத்திரமே சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முன்பதிவு செய்து கொள்வதற்காக 21 17 116 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களும் தமது மாவட்டத்துக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணை மேற்குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னால் உட்செலுத்தி அழைப்பை மேற்கொள்வதன் ஊடாக முன்பதிவு செய்து கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் சேவையை பெற முன்பதிவு செய்துக்கொள்ள உள்ளவர்கள் 011 - 21 17 116 என்றவாறு தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு அழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.