பட்டினியால் தவிக்கும் பலர்... வெளியானது தரப்படுத்தல்! இலங்கைக்கு எத்தனையாம் இடம் தெரியுமா?

2021 ஆம் ஆண்டுக்கான 116 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

பெலராஸ், போஸ்னியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று நிலைகளிலும் சிலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளிலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு 64 ஆவது நிலையில் இருந்த இலங்கை இவ்வருடம் 65 ஆவது நிலையில் உள்ளது. இலங்கையின் பட்டினி வீதம் மிதமான நிலையில் உள்ளது.

அத்துடன் கடந்த வருடம் 94 ஆவது நிலையில் இருந்த இந்தியா இவ்வருடம் 101 ஆவது நிலையில் உள்ளது. இந்தியாவின் பட்டினி வீதம் தீவிரமான நிலையில் உள்ளது.

ஆசிய நாடுகளில் பாகிஸ்தான் 92 ஆவது நிலையிலும், அங்கு பட்டினி வீதம் தீவிரமான நிலையில் காணப்படுகிறது. நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் 76 ஆவது நிலையிலும் உள்ளன.

இவ்விரு நாடுகளின் பட்டினி வீதம் மிதமான தன்மையில் காணப்படுகிறது.

116 நாடுகளில் சோமாலியா 116 ஆவது இடத்தில் உள்ளது. சோமாலியாவின் பட்டினி வீதம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலைமை அடுத்த ஆண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

116 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் பட்டினி நிலையில் ஒரு நாடு குறைந்தாகவும், ஒரு நாடு மிதமாகவும்,6 நாடுகள் தீவிரமானதாகவும், 4 நாடுகள் ஆபத்தானதாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 7 நாடுகளின் தற்காலிக நிலைகள் நிறுவப்படவில்லை. 2020ஆம் ஆண்டு 107 நாடுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.