பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக வீதிக்கு இறங்கிய பொதுமக்கள்; தலவாக்கலை நகரில் போராட்டம்!

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், விவசாயிகளுக்கான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வரவேண்டும் எனவும் போராட்டத்தில்போது குரல் எழுப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் மஹிந்த ராஜபக்ஸவுடைய அரசாங்கம் இன்று வீதிக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
"முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இந்த நாட்டிலே இன்று நிர்வாகமொன்று இல்லை. அரசாங்கம் இருக்கின்றதா, அமைச்சரவை இருக்கின்றதா என்று கூட தெரியவில்லை. பொருட்களின் விலை கட்டுக்கடங்காத வகையில் உயர்கின்றது. கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுகின்றது. பின்னர் அந்த முடிவு மீளப்பெறப்படுகின்றது. எனவே, இங்கு எவ்வாறானதொரு ஆட்சி நடைபெறுகின்றது என தெரியவில்லை என போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொளுத்தி சில தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஆயிரம் ரூபா கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.