பயணக் கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீண்ட நாட்கள் விடுமுறையின் போது, சிலர் பயணக்கட்டுப்பாட்டையும் கருத்தில் கொள்ளாமல் மாகாணங்களுக்கிடையில் பயணித்துள்ளனர்.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையை 600 வரையிலும், நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 25 வரையிலும் மட்டுப்படுத்த பொது மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.

எனினும், இது போன்ற சில செயற்பாடுகள் மேலும் கொவிட் பரவலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொது மக்களின் செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டே கொவிட் பரவல் அதிகரிக்குமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.