எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் எந்த அர்த்தமும் இல்லை - அமைச்சர் கம்மன்பில

குறுகிய காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்காது என அமைச்சர் உதய கம்மன்பில நேற்று (15) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 15 ரூபாய் இழப்பும், ஒரு லிட்டர் டீசலுக்கு 16 ரூபாய் இழப்பும் ஏற்படும் நிலையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிகரிப்பை கோரியதாக கூறினார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதி அமைச்சரிடம் உதவி கோரப்பட்ட நிலையில் திறைசேரியின் நிலை குறித்து நிதி அமைச்சர் தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இந்நிலையில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் விலை அதிகரிப்பதற்கான முடிவை எட்ட சில மாதங்கள் ஆகும் என்றும் அமைச்சர் கம்மன்பில மேலும் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.