முஸ்லிம்களுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது அவர்கள் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மது நபியின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள், முஹம்மது நபிக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொவிட் தொற்றை எதிர்கொண்டு நாம் கடந்துச் செல்லும் இந்த கடுமையான காலத்தை வெற்றி கொள்வதற்கு நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு முஸ்லிம் மக்களுக்கு நான் நினைவூட்டுகின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, ஏழை மக்களுக்கு உதவி செய்து நபி நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.