இரவு நேர பிரயாணத் தடை நீக்கம் - புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!

கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரயாணத்தடை நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் அமுலிலுள்ளதாகவும் தொற்று நிலைமையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு மக்கள் பங்களிப்பு அவசியமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உட்புற திருமண நிகழ்வுகளுக்கு 100 பேருக்கும், வெளிப்புற நிகழ்வுகளுக்கு 150 பேர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்களில் 75 பேர் வரையிலும், வெளிப்புறமெனில் 100 பேர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.