அரசாங்கத்தின் கொள்கையை விமர்சித்த உயர் அதிகாரி உடன் பணி நீக்கம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மரம்பே விவசாய அமைச்சில் அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்கவிடம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய விவசாயக் கொள்கை, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் சிறுதொழில் வியாபாரக் கூட்டுத் திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவில் இருந்து பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.