முஹம்மது நபியின் கேளிச்சித்தரத்தை வரைந்தவருக்கு நேர்ந்த கதி!

முஹம்மது நபியின் கேளிச்சித்தரத்தை  வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் வீதி விபத்தில் மரணமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸ் காவலில் இருந்த இவர் காவல்துறை வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்திருக்கிறது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.

இதில் சதி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

டென்மார்க் செய்தித்தாள் முஹம்மது நபியின் கேளிச்சித்தரத்தை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கேளிச்சித்தரம் வரைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

2007-ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அல்-கய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 லட்சம் டாலர் வெகுமதி அளிப்பதாகவும் அறிவித்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.