அதிபர், ஆசிரியர்களை சீண்டிய ஆளுநர் ராஜா கொல்லுரேக்கு நடந்த கதி.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் ராஜா கொல்லுரேவை, தமது கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, ராஜா கொல்லுரே தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21, 22 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகளிக்காத ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளத்தை நிறுத்துவதாகவும், 25 ஆம் தேதி பாடசாலை வருகின்ற ஆசிரியர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பழைமை வாய்ந்த சோசலிசக் கட்சியான இலங்கை காெம்யுனிச கட்சின் மத்திய செயற்குழு இன்று கூடி, அதன் தலைவரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.