பற்றாக்குறை இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்.

எந்தவொரு காரணத்துக்காகவும் அத்தியாவசிய பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட இடமளிக்க வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உலக சந்தையில் சில பொருட்களின் விலை உயர்வடைந்ததால், பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் பொருட்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்திப் பொது மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.