பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியது; விசேட கண்காணிப்பு தீவிரம் - பொலிஸ்

நாட்டில் இன்றைய தினம் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளது.

எனவே இன்றிலிருந்து நாடளாவிய ரீதியில் பொது போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் தீவிர கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்படல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கண்காணிப்புக்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெளிவுபடுத்துகையில், 

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றமை தொடர்பில் 158 வீதித் தடைகள் அமைக்கப்பட்டு நாடளவிய ரீதியில் தொடர் கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வீதித்தடைகளில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 7,392 வாகனங்களும் , 15,189 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது அனுமதியின்றி மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட 415 வாகனங்களும் , 965 நபர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். அத்தோடு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 79 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 5 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாண எல்லைகள்

இதே வேளை மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதித்தடைகளில் 116 பொலிஸ் உத்தியோகத்தர்களும் , 83 முப்படையினரும் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பாதுகாப்பு படையினரால் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 777 வாகனங்களும் , 1332 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதே போன்று மேல் மாகாணத்திலிருந்து வெளிறே முற்பட்ட 950 வாகனங்களும் , 1,934 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது அனுமதியின்றி பயணிக்க முற்பட்ட 345 வாகனங்களும் , 618 நபர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். இவை தவிர அதிவேக நெடுஞ்சாலைகளில் 17 நுழைவாயில்களில் 84 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் போது 3090 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு , அனுமதியின்றி பயணித்த 227 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

மேல் மாகாண பொது போக்குவரத்து

மேல் மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபட்டுள்ள பேரூந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தொடர்பில் 511 பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி செவ்வாயன்று காலை 6 மணி முதல் இரவு 12 மணிமுதல் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது 841 பேரூந்துகளும் , 1,583 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இவற்றில் 377 பேரூந்துகளும் , 724 முச்சக்கரவண்டிகளும் சுகாதார விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை இனங்காணப்பட்டுள்ளது.

விசேட கண்காணிப்பு

இன்றைய தினம் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. எனவே இன்றிலிருந்து நாடளாவிய ரீதியில் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் தீவிர கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.