மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம் - பொது மக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கான தீர்மானம் கடந்த கொவிட் செயலணி கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை, நாளைய தினம் (01) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.