பயங்கரமான டெல்டா பிளஸ் வைரஸ் இலங்கையைத் தாக்கலாம் - கடும் தொனியில் வெளிவந்த எச்சரிக்கை.

மிக மோசமான டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு வைரஸ் இலங்கையில் பரவக்கூடிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ஏனைய கொரோனா வைரஸ் திரிபுகளைப் போன்றே டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் திரிபு வைரஸ் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இலங்கையில் இதுவரை அந்த வைரஸ் இனம் காணப்படவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இலங்கையில் அந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தி வருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.