கவனயீனத்தின் பிரதிபலன் நான்கு வாரங்களில் தெரியவரும் - பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

தற்போது உலகின் பல நாடுகளும் அவதானித்து வரும் A30 வைரஸ் தொடர்பில் இலங்கையும் கருத்தில் எடுத்துள்ளதாக மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Professor Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பதால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்... 

"இந்த வகையைப் பற்றி ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த A30 வகை ஆனது பைசர், அஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாதது என்று கூறப்படுகிறது. இது பரவினால் பெரும் அசௌகரியம் ஏற்படும் என உலகமே உற்று நோக்குகிறது.

எனினும் இது தொடர்பில் நாமும் அவதானத்துடன் இருக்கின்றோம். கொவிட் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்று எண்ணி , கொவிட்டுக்கு முன்னரான வாழ்க்கைக்கு செல்வோமாயின் எதிர்வரும் 4 வாரங்களின் பின்னர் அதன் பிரதிபலனை எம்மால் அனுபவிக்க நேரிடும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.