இணக்கப்பாடின்றி நிறைவு பெற்ற பேச்சுவார்த்தை - நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

3 கட்டங்களின் கீழ் அரசாங்கம் முன்வைத்த தீர்மானமானம் தொடர்பில் ஆராயப்பட்ட இன்றைய பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதலாம் கட்டமாக எதிர்வரும் 2022 ஜனவரி மாதம் தீர்வு வழங்குவதாகவும், 2 மற்றும் 3ஆம் கட்டங்களின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் தீர்வு வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தங்களுக்குள் கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும், நாளைய தினம் இது தொடர்பில் இறுதி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.