உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

உள்ளூர் பால்மாக்களின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபாய் வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது.

எனினும் இதுதொடர்பில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், பெல்வத்த நிறுவனம் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

380 ரூபாவாக இருந்த குறித்த நிறுவனத்தின் 400 கிராம் பால்மா பொதியின் விலை, தற்போது 460 ரூபாயென விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டொலர் தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாவால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் புதிய விலை 1,195 ரூபாவாக உள்ளது.

400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 480 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.