பண்டோரா ஆவண விவகாரம்; ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இதில் முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த அரச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராளபக்ஸவின் பெயரும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.