ஊரடங்கு நீக்கத்திற்கு இதுவே காரணம்! இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

"நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுக்குள் வரவில்லை. பொருளாதார பிரச்சினைகளால் நாட்டைத் தொடர்ந்து மூடிவைக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே ஊரடங்கு சட்டத்தை நீக்கினோம். வைத்திய நிபுணர்களின் கூற்றின்படி மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் கோவிட்டின் பேராபத்தை நாடு எதிர்கொண்டே தீரும்”

இவ்வாறு கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே அக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும்.

ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி கோவிட் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.

மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும். நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது.

கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவுக்கமைய தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது.

இந்தக் காலப்பகுதிகளிலும் அதேபோன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்கொண்டு நடத்திச் செல்ல முடியும்.

அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் வழமையான முறையில் நடத்திச் செல்லப்படவுள்ளது.

அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.