குளியாப்பிட்டியில் மீண்டும் கொரோனா கொத்தணி!! வெளிவந்த எச்சரிக்கைத் தகவல்!

அடையாளப்படம்
குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் தோன்றும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டி – எலத்தலவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் அப்பகுதியில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவத்துடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், நாட்டில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.