மீண்டும் உயர்கிறது எரிபொருள் விலை? நஷ்டத்தை ஈடு செய்யும் முயற்சி!

நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியதுடன், இந்த விடயம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிலவரப்படி இலங்கை பொற்றோலியக் கூட்டுத் தாபனம் 70 பில்லியன் ரூபா இழப்பை சந்தித்துள்ளது.

எரிபொருள் விலையை அதிகரிப்பதே இதற்கு பிரதான தீர்வாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.