சீனா உடனான இலங்கையின் தொடர்பு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தனிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர், இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை அவர் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
அத்துடன், நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா இன்று புது டெல்லி நோக்கி பயணமானார்.
Post a Comment