மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிவரும்; விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன!

கொவிட் அச்சுறுத்தல் நாட்டில் இன்னும் நீங்கவில்லை. அதனால் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பேணிவருவதற்கு தவறினால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டி வரும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாயளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதன் அடிப்படையிலேயே சுகாதார கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றோம். என்றாலும் நாள்தோறும் 500 முதல் 600 வரையான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.

அதனால் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை தொடந்து பேணிவரவேண்டும் என்பதை வலிறுயுறுத்தி தெரிவிக்கின்றோம்.

இருந்தபோது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை. அதிகமானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அதனை முறையாக அணிவதில்லை.

சன நெருக்கடியான இடங்களில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். அத்துடன் மக்களின் தேவைக்காக சில கட்டுப்பாடுகளை இலகுபடுத்தி இருக்கின்றோம்.

குறிப்பாக திருமண நிகழ்வுக்களுக்கு அனுமதி வழங்கி, அதில் ஒன்றுகூடுவதற்கு 100 முதல் 150 பேருக்கு தற்போது அனுமதி வங்கி இருக்கின்றோம். இந்த வாய்ப்புக்களை மக்கள் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது.

ஏனெனில் கொவிட் தொற்று எமது நாட்டில் இருந்தோ உலகில் இருந்தோ இன்னும் பூரணமாக நீங்கவில்லை. அதனால் எந்த மக்கள் மிகவும் அவதானமாகவே தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

மீண்டும் கொவிட் பரவல் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டிவரும். அதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிவரும்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், அதன் பின்னர் எமக்கு குற்றம் தெரிவிக்கவேண்டாம் என்பதை மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.