அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 100% வைப்புத் தொகை தேவைப்பாடு இன்று (01) முதல் நீக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்' வெளியிட்டு உரையாற்றும்போதே, ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதி மேற்கொள்ளுமாறு மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் டொலருக்கான பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற 623 பொருட்களுக்கு எதிராகக் கடந்த செப்டெம்பர் 9 ஆம்திகதி முதல் மத்திய வங்கியினால் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
Post a Comment