கோதுமை மாவின் விலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம்...!

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பதாக பிரிமா நிறுவனம் அண்மையில்  அறிவித்திருந்தது.

எனினும், இதையடுத்து நாட்டில் கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.