வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு!

வாகன இறக்குமதியின் போது, அறவிடப்படும் வரித் தொகையை டொலரில் செலுத்த இணக்கம் தெரிவிப்போருக்கு, வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அனுமதி வழங்கும் திட்டமொன்று குறித்து மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று (27) கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் குறித்து, இன்றைய தினம் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும பதில் வழங்கியிருந்தார்.

குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எட்டவில்லை என அவர் கூறினார்.

வாகன இறக்குமதி தொடர்பிலான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதைவிடுத்து, வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.