ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய - பொதுச்செயலாளர் முக்கிய உறுதிமொழி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும், உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியுயோர்க் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.