வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எச்சரிக்கை.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நீடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அதன் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்தார். 

பொதுமக்கள் அவசியமற்ற முறையில் பயணிப்பதற்கு அதிகாரிகள் அனுமதியளிப்பார்களாயின், இந்த ஊரடங்கு சட்டத்தில் எவ்வித பயனும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.