இஸ்லாமியர்களின் தெய்வமான அல்லாஹ் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் ஏன் வாய்திறக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த கேள்வியை எழுப்பினார்.
ஜனாதிபதி சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும், அதன் பயனாகவே புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என குறிப்பிட்ட்டதாகவும் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறினார்.
இந்நிலையில் அரசாங்கம் எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது வலியுறுத்தினார்.
Post a Comment