9ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாடு திரும்பியவுடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான ஆலோசனைகளை தமக்கு வழங்குவார் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் பின்னர், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலப் பகுதிகளில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் பொறுப்பின்றி செயற்படும் பட்சத்தில், கொவிட் தொற்று மீண்டும் பரவி, பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இராணுவ தளபதி கூறுகின்றார்.
நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு கடுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment