இலங்கையின் உள்ளக முரண்பாட்டுக்கு வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதாக ஜெனிவாவில் சீனா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றியபோது, சீன பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கிறோம்.
அதேபோல இலங்கையின் உள்ளக விடயங்களுக்கு வெளிப்புற தலையீடுகளால் இடையூறு விளைவிப்பதற்கு தாங்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக சீனா தெரிவித்துள்ளது.
Post a Comment