பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இந்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 42,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின், எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல வருடங்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு 42,000 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.