சாதாரணதர, உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ள உத்தேச திகதிகள் வெளியானது.

கல்விப் பொது தராதர சாதாரண, உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை எப்படி நடத்துவதென்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இன்று சகோதர ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் பரீட்சைகளுக்கான திகதி இறுதிப்படுத்தப்படாவிட்டாலும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வருடம் நவம்பர் 14 ஆம் திகதியும், உயர்தர பரீட்சையை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதியிலிருந்து மார்ச் 3 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தின் கருத்துக்களை அறிந்து, மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.