வைத்தியசாலைகளில் தேங்கி கிடக்கும் சடலங்கள் - சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

நீண்ட நாட்களாக நாட்டின் சில மருத்துவமனைகளில் தேங்கிக்கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீதித்துறை நடவடிக்கை மற்றும் பல்வேறு காரணங்களால் சில மருத்துவமனைகளில் இருந்து சில சடலங்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடனான கலந்துரையாடலின் போது, ​​சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு இந்த விடயத்தைப் கையாளுமாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த பல உடல்கள் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் இருந்து அகற்றப்பட்டு மீதமுள்ள உடல்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சில மருத்துவமனைகளின் பாழடைந்த பிரேத அறைகள் மற்றும் குளிர்பதன கிடங்குகளை விரைவாக சரிசெய்யுமாறு சுகாதார அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, மருத்துவமனைகளில் தேவையற்ற உடல்கள் தேங்குவதைத் தடுக்க ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.