நாட்டில் புதிதாக மேலும் பல திரிபுகள் அடுத்தடுத்து உருவாகி வருவதாக இராஜாங்க அமைச்சர் தகவல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரஸ் திரிபு கட்டுப்படுத்தப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் புதிதாக மேலும் பல திரிபுகள் அடுத்தடுத்து உருவாகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது பெருமளவு நாடுகள் முடக்கப்படவில்லையென தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், குற்றம் சாட்டுவதை விடுத்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அனைவரும் ஒன்றிணைவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவ நிபுணர் பேராசிரியர் நிலீகா மலவிகே, விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜே விக்கிரம உள்ளிட்ட மூவர் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து விலகிய போதும் அவர்கள் சுகாதாரத்துறைக்கு முழுமையான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவார்களெனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.