பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான முக்கிய கருத்துக்கள்.

சுகாதாரத் துறையினர் அனுமதி வழங்கினால் பாடசாலைகளை உடனடியாக திறக்கத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான திட்டத்தை இந்தக் கலந்துரையாடலின் பிறகு கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கடந்த காலத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாடசாலை நடத்திய முறை இந்த நாட்களில் மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆபத்தான நிலையில் அதிகமான கொரோனா நோயாளிகள் பதிவாகும் போது கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழேயே பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால், குறைந்த வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை திறந்து பராமரிக்க முடியும். ஆனால் தற்போதைய நிலை அவ்வாறு இல்லை, ஆகவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழேயே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இதில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதை தாமதப்படுத்துவதற்கு அவசியமில்லை என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்றால், இப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.