ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் - ஐ.தே.க கோரிக்கை.

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தொற்றுநோயிலிருந்து பொது மக்கள் பாதுகாப்பாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இந்நிலையில், பொது மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், ஆனால் நாம் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது. எனவே மேலும் ஒரு மாதத்திற்கு நாடு மூடப்பட்டால் பொது மக்கள் பலர் காப்பாற்றப்படுவார்கள்,

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதில் அவர் ஈடுபடுவார், நாட்டின் பொருளாதாரத்திற்கான ஒரு தேசிய திட்டத்தில் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

அத்துடன், சர்வதேச சந்தை பற்றிய புரிதலுடன் உலக உணவு திட்டத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளை பின்பற்ற வேண்டும். ஒரு அரசு அவ்வாறு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் மக்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.