அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நோக்கி இன்று(18) காலை பயணமானார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி முதல் முறையாக கலந்துகொள்ள உள்ளதுடன், நாடு கடந்து, சர்வதேச கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த விஜயத்தின்போது பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.