நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் பின்னரே மாகாணங்களுக்கிடையில் பொதுப்போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பாரத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதேவேளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் மாகாணங்களுக்குள் ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
“முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுகினற நிலையில் நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எதிர்வரும் 2 வாரங்களுக்கு மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடனான கலந்துரையாடலில் எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மாகாணங்களுக்கிடையில் ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம் எனவும் சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டார். இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார் பஸ் என்பன மாகாணங்களுக்குள் மாத்திரம் முன்னெடுக்கப்படும். அத்துடன் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது. எனவே மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் காணப்படும். எனவே எதிர்வரும் 2 வாரங்களின் பின்னர் மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.” என அவர் தெரிவித்தார்.
Post a Comment