ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும்? விசேட வைத்திய நிபுணர் தகவல்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமே இம்முறையும் வெளியிடப்படும் எவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகிய இரு செயற்பாடுகளின் காரணமாகவே தற்போது கொவிட் தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும் , போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் கொவிட் பரவலைத் தடுக்க முடியாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.


நீண்ட நாட்களுக்கு நாடு முடக்கப்படுவதன் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மதிப்பிட முடியாதவை.


அதனைக் கருத்திற் கொண்டு நாட்டை முடிந்தளவிற்கு விரைவாக திறப்பதே தற்போதைய தேவையாகவுள்ளது என்று தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.