வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் மற்றுமொரு அறிவிப்பு.

வாகன இறக்குமதியின்போது விதிக்கப்படும் வரியை டொலர்களில் செலுத்த இணக்கம் தெரிவிப்பவர்களுக்கு, வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இதுதொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க தற்போது மத்திய வங்கி தயார்நிலையில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு டொலர்களில் வரியை செலுத்துவது தொடர்பான யோசனை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறே, நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு தேவையான பொருளியல் தந்திரோபாயங்களை பின்பற்றி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.