அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்…!

சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு நிவாரண விலையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.

சகல மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் இந்த விடயத்தில் தலையிட்டு தமக்கு நாளாந்த அடிப்படையில் அறிக்கைகளை வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

சகல மாவட்ட செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் உணவு ஆணையாளர் ஆகியோருக்கு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைத்தல், விநியோகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், அதிக விலையை அறவிடுதல் மற்றும் பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட அனைத்து முரண்பாடுகளையும் நீக்கும் நோக்கில், ஜனாதிபதியினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆவது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசின் நிர்ணய விலை அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து, மக்களுக்கு நிவாரண விலையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது பணிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.