தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை இல்லை – அமைச்சரவை இணைப்பேச்சாளர்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தளர்த்தப்படுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய கொரோனா தடுப்பு தேசிய செயலணியூடாக இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கை தொடர்பில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் கலந்துரையாடலின் போது தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.