சீனி விநியோகம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக தனியார் துறையின் மொத்த விற்பனையாளர்களுக்கு சீனி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த சீனி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய உள்ளூர் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, வெள்ளை சீனி ஒரு கிலோ 117 ரூபாவுக்கும், சிவப்பு சீனி கிலோவொன்று 120 ரூபாவுக்கும் எந்தவொரு களஞ்சியசாலையிலும் இருந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு தொடர்பில் மேலதிக விபரங்களை 0113 681 797 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.