அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட நம்பிக்கை!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஏற்றுக்கொண்டு, அதிபர் – ஆசிரியர்கள் மீண்டும் சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தாம் நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தம்மால் வழங்கப்பட்ட தீர்வுக்கு அமைய, வழங்குவதாக முன்வைக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவை இந்த மாத சம்பளத்துடன் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தளத்தில் வழியாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, இணைய கட்டண தொகையாக 5000 ரூபாவை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாhகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிபர் – ஆசிரியர்களின் கோரிக்கையை, எதிர்வரும் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.