ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தெரிவித்தார்.
மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜபுர வைத்தியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைத்ததுடன், அங்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டார். தொற்றா நோய்கள் பலவற்றிற்கு சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் மொனராகலை ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை, நாற்பது நோயாளர்கள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது.
இவ்வைத்தியசாலையில் வெளிநோயளர் பிரிவு மற்றும் தங்கி சிகிச்சை பெறும் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும். வைத்தியசாலையின் திறப்பு விழாவில் வெல்லவாய சிறி பியரதன வித்யாயதனயவின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கந்தஉட பங்குவே சுதம்ம தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
Post a Comment