பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

ISIS அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்று தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக வழங்கப்பட்ட அறிவிப்பு பத்திரமே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிவிப்புக்கள் பொலிஸ் திணைக்களத்திற்குள் வழமையாக காணப்படுகின்ற ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தகவலின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம், உறுதிப்படுத்தப்படாத தகவல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.