ஊரடங்கு நீடிப்புடன், இராணுவ தளபதியின் விசேட அறிவிப்பு.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாடு மீண்டும் திறக்கப்படும் போது விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை கோரியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்துள்ளார். 

இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி உடனான சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, தற்போது நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நீடிப்புடன் இலங்கையில் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் நான்காவது வாரத்தை நோக்கி செல்கிறது.

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 04- வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு சுகாதார வல்லுநர்கள் பலமுறை அரசாங்கத்தை கோரியதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.