நாட்டைத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்.

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்கி நாட்டை திறப்பது குறித்த தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதியே எடுக்கப்படுமென்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணுமாறு மக்களிடம் கோருவதாக அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் கொவிட் 19 பரவலை மிகவும் வெற்றிகரமாக ஒழிக்க முடியுமென்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார தரப்பினர் அவர்களின் பொறுப்பை முறையாக செய்யும் போது மக்களும் அவர்களின் கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டுமென்பதை அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் வெற்றிகரமாக கொவிட்19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.