உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிக்கை வௌியிட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு உரித்தான குழந்தை பருவத்தை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பெரியவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
முற்போக்கான அரசாங்கம் என்ற வகையில், பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்குள் குழந்தைகளுக்கு தேவையான சேவைகள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதை யதார்த்தமாக்கி வருவதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.
இதனிடையே, சிறுவர்களின் அழகான உலகை எவ்வித தடையுமின்றி அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெரியோரின் கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment